உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / காலி பணியிடம் நிரப்பக்கோரி பேட்ஜ் அணிந்து ஆர்ப்பாட்டம்

காலி பணியிடம் நிரப்பக்கோரி பேட்ஜ் அணிந்து ஆர்ப்பாட்டம்

நாமக்கல், காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்பக்கோரி, தமிழ்நாடு அரசு கல்லுாரி ஆசிரியர் கழகத்தினர், நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் அரசு மகளிர் கல்லுாரி முன், கோரிக்கை வாசகங்கள் அடங்கிய பேட்ஜ் அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கிளை தலைவர் புவனேஸ்வரி தலைமை வகித்தார். செயலாளர் ஷர்மிளாபானு முன்னிலை வகித்தார்.ஆர்ப்பாட்டத்தில், புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்து, பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். அரசாணை வெளியிட்டு, நான்கு ஆண்டுகளுக்கு மேலாகியும், வழங்கப்படாத பேராசிரியர் பணிமேம்பாடு உடனே வழங்க வேண்டும். புத்தொளி, புத்தாக்க பயிற்சி நிபந்தனைக்கான கால நீட்டிப்பை, டிச., 2023 வரை நீட்டித்து வழங்க வேண்டும். கல்லுாரி கல்வி பணியில் பணியாற்றும், அரசு கல்லாரியின் மூத்த ஆசிரியர் ஒருவரை கல்லுாரி கல்வி இயக்குனராக நியமிக்க வேண்டும். பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில் பணியாற்றும் ஆசிரியர்களின் பணி நீட்டிப்பு காலத்தில், 20 சதவீத ஊதியம் குறைத்து வழங்குவதை தடுக்க வேண்டும். அரசு கலை, அறிவியல் கல்லுாரிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை, நிரந்தர அடிப்படையில் நியமிக்க வேண்டும். பல்கலை மானிய குழுவின் வழிகாட்டுதல்படி, கல்லுாரி ஆசிரியர்களின் ஓய்வுபெறும் வயதை, 65 ஆக உயர்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட, 25 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ