உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / முதியோர்களுக்கு போர்வை வழங்கல்

முதியோர்களுக்கு போர்வை வழங்கல்

நாமகிரிப்பேட்டை, டிச.13-நாமகிரிப்பேட்டையில், மாரியம்மன் அன்னதான கூடத்தில் கடந்த, மூன்று ஆண்டுகளாக வள்ளலார் அன்னதான அறக்கட்டளை சார்பில், தினமும் முதியவர்கள், 60 பேருக்கு மதிய உணவு வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், கடந்த சில வாரங்களாக பெய்த தொடர் மழை மற்றும் குளிர் காலம் தொடங்கியதால், நாமகிரிப்பேட்டை பகுதியில் குளிர் வீசி வருகிறது. இதில், இப்பகுதியை சேர்ந்த முதியவர்கள் மிகவும் சிரமப்படுகின்றனர்.இதையடுத்து, சீனிவாசன் குடும்பத்தினர் வயதானவர்களுக்கு போர்வை தர முடிவு செய்தனர். அதன்படி நேற்று, 65க்கும் மேற்பட்ட முதியவர்களுக்கு போர்வை, பிஸ்கட், தண்ணீர் பாட்டில் வழங்கப்பட்டது. அறக்கட்டளை தலைவர் நல்லதம்பி, பொருளாளர் சுந்தரம், நிர்வாகிகள் ராஜா, பிரசாத் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை