மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 481 கோரிக்கை மனுக்கள் அளிப்பு
நாமக்கல், நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது. கலெக்டர் துர்கா மூர்த்தி தலைமை வகித்தார். மொத்தம், 481 மனுக்களை மக்கள் அளித்தனர். அவற்றை பெற்றுக்கொண்ட கலெக்டர், பரிசீலனை செய்து உரிய அலுவலர்களிடம் வழங்கி, 'மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, உத்தரவிட்டார்.தொடர்ந்து, 'கனவு இல்லம்' திட்டத்தில், பயனாளி ஒருவருக்கு வீட்டுமனை பட்டா, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், 10 பேருக்கு, 70,958 ரூபாய் மதிப்பில், 2 மூன்று சக்கர வாகனம், ஒரு கார்னர் ஷீட், ஒரு பிளைண்ட் ஸ்டிக், 6 தையல் இயந்திரம் வழங்கப்பட்டன.