உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / கிருத்திகையில் முருகன் கோவில்களில் பூஜை

கிருத்திகையில் முருகன் கோவில்களில் பூஜை

‍எருமப்பட்டி: கிருத்திகையையொட்டி, சிங்களகோம்பை பாலமுருகன் சுவாமிக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.எருமப்பட்டி அருகே, சிங்களகோம்பையில் பிரசித்தி பெற்ற பாலமுருகன் கோவில் உள்ளது. கிருத்திகையையொட்டி, பாலமுருகன் சுவாமிக்கு, பால், தயிர், இளநீர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட, 12 வகையான வாசனை திரவியங்களால், சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.தொடர்ந்து, விநாயகர், பாலமுருகனுக்கு மலர்களால் ராஜ அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை காட்டப்பட்டது. இதில், ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.* நாமக்கல் - மோகனுார் சாலை, காந்தி நகர் பாலதண்டாயுதபாணி கோவிலில் சுவாமிக்கு சிறப்பு ஹோமம், அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது. தொடர்ந்து, சுவாமி சந்தன காப்புடன், ராஜ அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். * நாமக்கல் கடைவீதி சக்தி விநாயகர் கோவில் பாலதண்டாயுதபாணி சன்னதியில், சுவாமிக்கு ராஜ அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காட்டப்பட்டது. * நாமக்கல் - துறையூர் சாலை, ரெட்டிப்பட்டி, கந்தகிரி பழனியாண்டவர் கோவிலில், திருநீறு அலங்காரத்தில் சுவாமி பக்தர்களுக்கு அருளினார். * மோகனுார், காந்தமலை முருகன் கோவிலில் சுவாமி, தங்க கவசத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.* வெண்ணந்துார் அருகே உள்ள பொன்பரப்பிப்பட்டி பஞ்.,க்கு உட்பட்ட வள்ளி, தெய்வானை முருகன் கோவிலில், நேற்று, மழை வேண்டி வருண யாகம் யாகம், லட்சுமி குபேர யாகம், கணபதி, சுப்பிரமணிய பூஜை மற்றும் சுமங்கலி பூஜை நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி