கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி முகாம்
எலச்சிபாளையம், எலச்சிபாளையம் யூனியன், அல்லாளபுரம் பஞ்.,ல் நேற்று, கால்நடை பராமரிப்புத்துறை சார்பில், கால்நடைகளுக்கு, 7வது சுற்று கோமாரி நோய் தடுப்பூசி முகாம் நடந்தது. கலெக்டர் துர்காமூர்த்தி தொடங்கி வைத்தார். மாவட்டத்தில் மொத்தமுள்ள, 2,81,458 கால்நடைகளுக்கு இத்தடுப்பூசி போடப்பட உள்ளது. பொதுமக்கள் அனைவரும் அந்தந்த பகுதி கால்நடை உதவி மருத்துவர்களால் குறிப்பிடப்படும் தேதியில், குறிப்பிட்ட இடங்களுக்கு அழைத்துச் சென்று கோமாரி நோய் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம். இந்த தடுப்பூசி பணிக்காக, கால்நடை உதவி மருத்துவர்கள், கால்நடை ஆய்வாளர்கள், கால்நடை பராமரிப்பு உதவியாளர்களை கொண்டு, 105 தடுப்பூசி குழுக்கள் அமைக்கப்பட்டு மாவட்டத்திலுள்ள அனைத்து குக்கிராமங்களுக்கும் நேரில் சென்று அந்தந்த கிராமங்களிலேயே கோமாரி நோய் தடுப்பூசி பணிகள் மேற்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.