உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / ராசிபுரத்தில் மழை

ராசிபுரத்தில் மழை

ராசிபுரம்: ராசிபுரம் சுற்று வட்டார பகுதியில், நேற்று காலை முதல் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. மாலை, 4:30 மணியளவில் காற்றுடன் துாறல் மழை பெய்ய தொடங்கியது. ராசிபுரம் சுற்று வட்டார பகுதியான கவுண்டம்பாளையம், அணைப்பாளையம், முத்துக்காளிப்பட்டி, ஆண்டகலுார் கேட், பட்டணம், வடுகம், நாமகிரிப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில், ஒரு மாணிநேரம் மழை பெய்தது. ராசிபுரம் புதிய பஸ் ஸ்டாண்ட், பழைய பஸ் ஸ்டாண்ட் கட்டனாச்சம்பட்டி ரோடு ஆகிய பகுதிகளில் மழைநீர் தேங்கி நின்றது. இந்த திடீர் மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. பூ, பழக்கடைகளில் வியாபாரம் குறைந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ