மேலும் செய்திகள்
ரேஷன் கார்டு திருத்த முகாமில் 136 மனுக்களுக்கு தீர்வு
3 hour(s) ago
நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில், ரேஷன் கார்டுகளில் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம் மற்றும் புதிய ரேஷன் கார்டு கேட்டு விண்ணப்-பிக்க, மாதந்தோறும் பொது வினியோகத்திட்ட குறைதீர்க்கும் முகாம், தமிழக அரசு சார்பில் நடத்தப்பட்டு வருகிறது.இம்முகாமில், ரேஷன் கார்டில் மொபைல் எண் பதிவு, ரேஷன் கடைகளின் செயல்பாடுகள் குறித்த புகார்களையும், பொது வினி-யோக திட்ட குறைபாடுகள் குறித்தும் பொதுமக்கள் மனு அளித்து வருகின்றனர்.அதன்படி, இம்மாதத்திற்கான பொது வினியோக திட்ட குறை-தீர்க்கும் முகாம், நாமக்கல், ராசிபுரம், மோகனுார், சேந்தமங்-கலம், கொல்லிமலை, திருச்செங்கோடு, ப.வேலுார் மற்றும் குமா-ரபாளையம் ஆகிய தாலுகாவில் உள்ள வட்ட வழங்கல் அலுவல-கங்களில் நேற்று நடந்தது.அந்தந்த பகுதி வட்ட வழங்கல் அலுவலர்கள் தலைமை வகித்-தனர். நாமக்கல் தாலுகாவுக்கு உட்பட்ட வட்ட வழங்கல் அலுவ-லகத்தில் நடந்த முகாமிற்கு, வட்ட வழங்கல் அலுவலர் (பொ) தங்கம் தலைமை வகித்தார்.முகாமில், 15 மனுக்கள் பெறப்பட்டு, தீர்வு காணப்பட்டது. மாவட்டம் முழுவதும், எட்டு தாலுகாவில் நடந்த முகாமில், 136 மனுக்கள் பெறப்பட்டு, அனைத்திற்கும் உடனடியாக தீர்வு காணப்பட்டது.
3 hour(s) ago