சேதமான குடிநீர் குழாய் சீரமைப்பு பணி துவக்கம்
பள்ளிப்பாளையம், காவிரி சுற்றுவட்டார குடியிருப்பு பகுதியில், சேதமடைந்த குடிநீர் குழாயை கண்டறிந்து சீரமைக்கும் பணி நடந்து வருகிறது.பள்ளிப்பாளையம் அருகே, ஆலாம்பாளையம் பஞ்.,க்குட்பட்ட காவிரி, கரட்டாங்காடு, பிரேம் நகர், வ.ஊ.சி., நகர், முனியப்பன் நகர் உள்ளிட்ட குடியிருப்பு பகுதிகளில், சில இடங்களில் குடிநீர் குழாய்கள் சேதமடைந்துள்ளன. இதனால் குடிநீர் வீணாகி, குடியிருப்பு பகுதிக்கு முழுமையாக தண்ணீர் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், தண்ணீர் பற்றாக்குறையும் ஏற்படுகிறது. குடிநீர் குழாய் சேதம் குறித்து பொதுமக்கள், ஆலாம்பாளையம பஞ்., அலுவலகத்தில் புகார் தெரிவித்தனர். இதையடுத்து, சேதமடைந்த குடிநீர் குழாயை கண்டறிந்து சீரமைக்கும் பணி, கடந்த இரண்டு நாட்களாக நடந்து வருகிறது. மேலும், உடைந்திருந்த குழாய்களை மாற்றி, புதிதாக அமைக்கும் பணியும் நடந்து வருகிறது.