உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / தார்ச்சாலை அமைக்கும் பணி; விரைந்து முடிக்க கோரிக்கை

தார்ச்சாலை அமைக்கும் பணி; விரைந்து முடிக்க கோரிக்கை

எருமப்பட்டி: எருமப்பட்டி யூனியன், அலங்காநத்தம் பஞ்., அரசு உயர்நிலைப்பள்ளியில் இருந்து புதுக்கோட்டை பஞ்., வெட்டுக்காடு வரை செல்லும், 2 கி.மீ., துார சாலை உள்ளது. இந்த சாலையை விவசாயிகள், பள்ளி மாணவ, மாணவியர் அதிகம் பயன்படுத்தி வருகின்றனர். 15 ஆண்டுகளுக்கு முன் தார்ச்சாலை போடப்பட்டதால், ஜல்லிகள் பெயர்ந்து கரடு முரடாக காணப்பட்டது. இதனால் இந்த சாலையை சீரமைத்து தர வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.இதையடுத்து, இந்த சாலையை புதுப்பிப்பதற்காக சாலையை வெட்டி, ஜல்லிக்கற்கள் கொட்டினர். ஆனால், பல நாட்களாக அப்படியே விடப்பட்டுள்ளதால், மாணவர்கள், வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, இந்த சாலைப்பணியை விரைந்து முடிக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி