உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / மேம்பாலத்தில் இரவில் கும்மிருட்டு மின் விளக்கு அமைக்க கோரிக்கை

மேம்பாலத்தில் இரவில் கும்மிருட்டு மின் விளக்கு அமைக்க கோரிக்கை

எலச்சிபாளையம் : ஆத்துமேடு திருமணி முத்தாறு மேம்பால சாலையில், மின் விளக்கு அமைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.மல்லசமுத்திரம் அருகே, ஆத்துமேடு திருமணிமுத்தாற்றின் வழியே தினமும் வையப்பமலை, வேலகவுண்டம்பட்டி, ராசிபுரம், நாமக்கல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு எண்ணற்ற வாகனங்கள் இரவு, பகல் பாராமல் சென்று வருகின்றன. சில ஆண்டுகளுக்கு முன், நெடுஞ்சாலைத்துறையினரால் மேம்பாலம் அமைக்கப்பட்டது. ஆனால், இதுவரை மின்விளக்கு ஏதும் அமைக்கப்படவில்லை. இதனால், இரவு நேரத்தில் மேம்பாலத்தில் கும்மிருட்டாக உள்ளதால், அந்த வழியாக டூவீலர்களில் செல்லும் வாகன ஓட்டிகள், அசம்பாவித சம்பவங்கள் ஏற்படுமோ என்ற அச்சத்திலேயே அங்கிருந்து கடந்து செல்கின்றனர்.எனவே, மேம்பாலத்தில் மின்விளக்குகள் அமைக்க, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை