கோடையில் குடிநீர் தேவைக்கு தண்ணீர் திறக்க வேண்டுகோள்
பள்ளிப்பாளையம்:பள்ளிப்பாளையம் சுற்று வட்டாரத்தில், 10 கி.மீ., துாரத்துக்கு மேட்டூர் கிழக்குகரை வாய்க்கால் செல்கிறது. தண்ணீர் திறக்கும்போது, எளையாம்பாளையம், மோளகவுண்டம்பாளையம் மற்றும் பல இடங்களில் உள்ள ஏரி, குளம், குட்டை, நீர் தேக்கம், ஓடை உள்ளிட்ட நீர் நிலைகளுக்கு, வாய்க்கால் தண்ணீர் வந்துசேரும். இதையடுத்த, சுற்று வட்டாரத்தில் நிலத்தடி நீர் மட்டம் அதிகரித்து காணப்படும். கடந்த, இரண்டு மாதமாக நீர் நிலைகளில் தண்ணீர் இல்லாமல் வறண்டு போய் காணப்படுகிறது. தற்போது, கோடைகாலம் என்பதால் நிலத்தடி நீர்மட்டமும் பாதிக்கப்பட்டுள்ளதால், தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. மேட்டூர் அணையில் போதுமானளவு தண்ணீர் உள்ளதால், கோடைகாலத்தில் ஏற்படும் தண்ணீர் பற்றாக்குறையை போக்க, மேட்டூர் கிழக்குகரை வாய்க்காலில், 15 நாட்களுக்கு தண்ணீர் திறக்க வேண்டும் என, வெப்படையை சேர்ந்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.