போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள டிரான்ஸ்பார்மரை இடமாற்ற கோரிக்கை
போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளடிரான்ஸ்பார்மரை இடமாற்ற கோரிக்கைபள்ளிப்பாளையம், நவ. 7-குமரன் நகர் ஓடையின் குறுக்கே அமைக்கப்பட்டுள்ள பாலம் முன், போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள டிரான்ஸ்பார்மரை இடமாற்ற, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பள்ளிப்பாளையம் அருகே, ஆவத்திபாளையம் அடுத்த குமரன் நகர் பகுதியில் ஓடை உள்ளது. இந்த ஓடையின் குறுக்கே உள்ள தரைப்பாலம் வழியாகத்தான் அப்பகுதி மக்களும், வாகன ஓட்டிகளும் சென்று வந்தனர். காவிரி ஆற்றின் குறுக்கே, ஓடப்பள்ளி பகுதியில் தடுப்பணை உள்ளது. இந்த தடுப்பணையில் மின் உற்பத்திக்கு தண்ணீர் தேக்கி வைக்கும்போது, குமரன் நகர் பகுதியில் உள்ள ஓடையில் தண்ணீர் ஏறி தரைப்பாலம் மூழ்கி விடும். இதனால், கடந்த நான்கு மாதங்களுக்கு முன், இந்த ஓடையின் குறுக்கே புதிய பாலம் கட்டப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டது.இந்த பாலத்தில் டூவீலர், கார், சரக்கு வாகனம், வேன் உள்ளிட்ட வாகனங்கள் சென்று வருகின்றன. இப்பகுதியின் முக்கிய வழித்தடமாக இந்த பாலம் உள்ளது. ஆனால், இந்த பாலத்தின் முன் உள்ள டிரான்ஸ்பார்மர், போக்குவரத்துக்கு பெரும் இடையூறாக உள்ளது. இரவு நேரத்தில் கவனக்குறைவாக வந்தால், டிரான்ஸ்பார்மர் மீது மோதி விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள டிரான்ஸ்பார்மரை வேறு இடத்திற்கு மாற்ற நடவடிக்கை எடுக்க, பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.