லாரி டிரைவர்களுக்கு பயிற்சி மையம் அமைக்க கோரிக்கை
நாமக்கல், 'நாமக்கல்லில், மத்திய அரசு சார்பில் லாரி டிரைவர்களுக்கு பயிற்சி மையம் அமைக்க வேண்டும்' என, எம்.பி., மாதேஸ்வரன், மத்திய அமைச்சரிடம் மனு அளித்தார்.நாமக்கல் எம்.பி., மாதேஸ்வரன், மத்திய தொழில் துறை மற்றும் வேலைவாய்ப்புத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியாவை, நேற்று நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:நாமக்கல், திருச்செங்கோடு, சங்ககிரி, சேலம் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள லாரி, ரிக், டிரெய்லர், கனரக, இலகுரக, சமையல் காஸ் மற்றும் எல்.பி.ஜி., டேங்கர் லாரி உரிமையாளர்கள், தற்போது, டிரைவர்கள் குறைந்து வருவதால், லாரி தொழிலின் சரிவிற்கு அதுவும் ஒரு காரணமாக உள்ளது.அதனால், மத்திய அரசு லாரி டிரைவர் தொழிலாளர்களுக்கு தனியாக, இன்றைய காலகட்டத்திற்கு இணங்க, புதிய நவீன முறை பயிற்சிகளை அளித்து, மேலும் இன்றைய லாரி டிரைவர் தொழிலாளர்களுக்கு (கனரக வாகன ஓட்டுனர் உரிமம் வைத்திருப்பவர்களுக்கு) இறப்பு மற்றும் மருத்துவ காப்பீடு திட்டங்களை அறிமுகப்படுத்தி, லாரி தொழிலை சரிவிலிருந்து மீட்டு, லாரி உரிமையாளகளின் வாழ்வாதாரத்தை காக்க வேண்டும்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.