உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / கத்தியுடன் வந்த 2 பேருக்கு காப்பு

கத்தியுடன் வந்த 2 பேருக்கு காப்பு

நாமக்கல், நாமக்கல் போலீஸ் எஸ்.ஐ., செட்டியண்ணன் தலைமையில் போலீசார், நேற்று முன்தினம் இரவு மேட்டுதெரு முனியப்பன் கோவில் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அங்கு மோட்டார் சைக்கிளில், 2 பேர் வந்தனர். அவர்கள் போலீசாரை கண்டதும் திரும்பி செல்ல முயன்றனர். இதனால் சந்தேகமடைந்த போலீசார், அவர்களை சுற்றி வளைத்து பிடித்தனர். பின்னர் அவர்களின் வாகனத்தில் சோதனை செய்தபோது, சீட் கவரில், 2.5 அடி நீளமுள்ள பட்டா கத்தி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து வாகனத்தில் வந்த மாரிகங்காணி தெருவை சேர்ந்த ராஜ்குமார், 23, மற்றும் 17 வயது சிறுவன் ஆகிய, இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர். விசாரணையில், இரவில் தனியாக வரும் நபர்களை மிரட்டி பணம் பறிக்க முயன்றது தெரியவந்தது. தொடர்ந்து அவர்களிடம் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை