உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / வழிப்பறியில் ஈடுபட்ட வாலிபருக்கு காப்பு

வழிப்பறியில் ஈடுபட்ட வாலிபருக்கு காப்பு

எலச்சிபாளையம், ஜூலை 2திருச்செங்கோடு அருகே, தோக்கவாடியை சேர்ந்தவர் சின்னுசாமி, 62, விவசாயி. இவர் கடந்த ஏப்.,23ம் தேதி அவரது தோட்டத்தில் விளைந்த பச்சை மிளகாயை, நாமக்கல் உழவர் சந்தையில் விற்பனை செய்வதற்காக, ஆல்டோ காரில் சென்றார். நள்ளிரவு 2:30 மணிக்கு, மாணிக்கம்பாளையம், புள்ளாகவுண்டம்பட்டி திருமணிமுத்தாறு பாலம் அருகில் செல்லும் போது, மூன்று பேர் கொண்ட கும்பல் வழிமறித்து, அவரிடமிருந்த, 2,400 ரூபாய், மொபைல் போன், கார் முதலியவற்றை பறித்துக் கொண்டு தப்பினர்.எலச்சிபாளையம் போலீசார் தனிப்படை அமைத்து, 'சிசிடிவி' கேமராக்களை சோதனையிட்டனர். அதில், திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது எலச்சிபாளையம் அருகே, இழுப்புலி போயர் தெருவை சேர்ந்த ராஜா மகன் பொன்னுவேல், 24, தங்கவேல் மகன் சஞ்சய், 23, சூரியபிரகாஷ் மகன் ஜீவா, 20: என்பது தெரிய வந்தது. பொன்னுவேல், சஞ்சய் ஆகியோரை ஏற்கனவே போலீசார் கைது செய்தனர். தலைமறைவாக இருந்த ஜீவாவை தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று, இழுப்புலி பகுதியில் சுற்றித்திரிந்த ஜீவாவை எலச்சிபாளையம் இன்ஸ்பெக்டர் ராதா தலைமையிலான போலீசார் கைது செய்து, திருச்செங்கோடு கிளை சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை