மேலும் செய்திகள்
லாரி மீது டூவீலர் மோதிபேக்கரி மாஸ்டர் பலி
09-Apr-2025
மல்லசமுத்திரம்:மல்லசமுத்திரம், நாடார்தெருவை சேர்ந்தவர் முருகேசன் மகன் இளங்கோவன், 44; இவர், மல்லசமுத்திரம் போலீஸ் ஸ்டேஷனில் தலைமை காவலராக பணிபுரிந்து வந்தார். கடந்த, 21 மாலை, 6:00 மணிக்கு, திருச்செங்கோடு நீதிமன்றத்தில் பணிமுடிந்த்து, 'சுவிப்ட்' காரில் வீடுதிரும்பியுள்ளார்.மோர்பாளையம் அடுத்த தனியார் பள்ளி அருகே சென்றபோது, முன்னாள் சென்ற மினி ஆட்டோ மீது கார் மோதுவதுபோல் சென்றதால், திடீரென பிரேக் பிடித்துள்ளார். இதில், கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையோரம் இருந்த புளியமரத்தில் மோதியது. படுகாயமடைந்த ஏட்டு இளங்கோவனை, அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு, திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். சிகிச்சை பெற்று, நேற்று முன்தினம் மதியம், வீடு திரும்பினார். ஆனால், திடீரென வயிற்றுவழி அதிகரித்ததால், சேலம் தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு சென்றார். ஆனால், அன்று இரவு, 1:00 மணிக்கு உயிரிழந்தார். இவருக்கு, சுகந்தி, 34, என்ற மனைவியும், கனிஷ்கா, 15, என்ற மகளும் உள்ளனர். மல்லசமுத்திரம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
09-Apr-2025