உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / டாஸ்மாக் கடையை மூடசாலை மறியல்

டாஸ்மாக் கடையை மூடசாலை மறியல்

டாஸ்மாக் கடையை மூடசாலை மறியல்பள்ளிப்பாளையம், டிச. 1-பள்ளிப்பாளையம் அருகே, ஜீவா செட் பகுதியில் டாஸ்மாக் கடை செயல்படுகிறது. இந்த டாஸ்மாக் கடையை மூடக்கோரியும், சட்ட விரோத மது விற்பனையை தடுக்க கோரியும், அண்ணா புரட்சி தலைவர் அம்மா திராவிட முன்னேற்ற கழகம் சார்பில், நாமக்கல் மேற்கு மாவட்ட செயலாளர் குமார் தலைமையில், 50க்கும் மேற்பட்டோர், நேற்று காலை, 8:00 மணிக்கு ஜீவாசெட் பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.பள்ளிப்பாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். இதனால் அரைமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை