உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / வட்ட அளவில் சதுரங்க போட்டி ; 300 வீரர், வீராங்கனையர் பங்கேற்பு

வட்ட அளவில் சதுரங்க போட்டி ; 300 வீரர், வீராங்கனையர் பங்கேற்பு

நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில், பாரதியார் தினம் மற்றும் குடியரசு தின விளையாட்டு போட்டிகள், வட்ட அளவில் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, நாமக்கல் வட்ட அளவிலான செஸ் போட்டி, எர்ணாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி சார்பில், நாமக்கல்லில் நடந்தது. அதில், 11, 14, 17 மற்றும் 19 வயதுக்குட்பட்ட பிரிவு என, நான்கு பிரிவுகளில் போட்டி நடத்தப்பட்டது. வட்ட அளவிலான போட்டியில், அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த, 300க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பங்கேற்றனர். போட்டியில், முதல் இரண்டு இடங்களை பெறும் மாணவ, மாணவியர் மாவட்ட அளவிலான போட்டிக்கு தேர்வு செய்யப்படுவர். போட்டிகளை, நாதன் செஸ் அகாடமி நிறுவனர் சிவராமன் நடத்தினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை