எருமப்பட்டி அரசு பள்ளியில் அரச மரத்தடி வாசிப்பு நிகழ்ச்சி
எருமப்பட்டி எருமப்பட்டி டவுன் பஞ்.,ல் அரசு உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் உள்ள அரச மரத்தடியில், மாணவர்களுக்கு வாசிப்பு திறனை வளர்க்கும் வகையில், மாதந்தோறும் மாணவர்களுக்கான சிறார் இலக்கிய நுால்கள் குறித்தும், நுால்களின் சாரம்சம் குறித்து விழிப்புணர்வு மற்றும் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது.பொட்டிரெட்டிப்பட்டி தமிழாசிரியர் பிரபாகரன் தலைமை வகித்தார். இதில், பாலபாரதி எழுதிய, 'மரப்பாச்சி சொன்ன ரகசியம்' என்ற நுாலின் சாரம்சங்களை மாணவர்களுக்கு பிரபாகரன் எடுத்துரைத்தார். நுாலை எழுதிய ஆசிரியர் பாலபாரதியின் வாழ்க்கை குறித்து மாணவர் விஜய் அறிமுகம் செய்தார். ஏற்பாடுகளை தமிழாசிரியர் செந்தில்குமார் செய்திருந்தார்.இதுகுறித்து, அரச மரத்தடி மாணவர் பரசுராம் கூறுகையில், ''இந்த வாசிப்பு நிகழ்வு எங்களது சிந்தனையை துாண்டும்படி இருந்தது. தொடர்ந்து புத்தகங்களை நாங்கள் வாசிப்பதற்கு அரச மரத்தடி மாணவர் வாசிப்பு வட்ட நிகழ்ச்சி பயன்பெறும் வகையில் இருந்தது,'' என்றார்.