உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / ரூ.25,000 அபராதம் விதிப்பு

ரூ.25,000 அபராதம் விதிப்பு

ராசிபுரம், டிச. 14-ராசிபுரம் நகராட்சியில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கேரி பேக்குகள் பயன்படுத்துவதை கட்டுப்படுத்த பல்வேறு முயற்சிகளை நகராட்சி நிர்வாகம் எடுத்து வருகிறது. குறிப்பிட்ட நாட்களுக்கு ஒருமுறை, நகராட்சி கடைகளில் சுகாதார ஊழியர்கள் சோதனை நடத்தி அபராதம் விதித்து வருகின்றனர்.அதன்படி, நேற்று நகராட்சி கமிஷனர் கணேசன் உத்தரவுப்படி, ராசிபுரம் பகுதியில் உள்ள கடைகளில் பான் மசாலா, புகையிலை, கேரி பேக்குகள் விற்பனை செய்யப்படுகிறதா என, திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அதில், 25 கிலோ கேரி பேக்குகள், புகையிலை பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், கடை உரிமையாளர்களிடம், 25,000 ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டது. துப்புரவு அலுவலர் செல்வராஜ், ஆய்வாளர் கோவிந்தராஜன், துப்புரவு பணியாளர்கள் சோதனையில் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை