| ADDED : நவ 16, 2025 02:29 AM
நாமகிரிப்பேட்டை: நாமகிரிப்பேட்டை, சீராப்பள்ளி டவுன் பஞ்சாயத்தில், 48 குடும்-பத்தினருக்கு, 4.8 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்டது. நாமகிரிப்பேட்டை, சீராப்பள்ளி டவுன் பஞ்சாயத்தை சேர்ந்த, தி.மு.க., நிர்வாகிகளில், கடந்த சில மாதங்களில் இறந்த நிர்-வாகி குடும்பங்களுக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவி வழங்கும் விழா நடந்தது. நாமகிரிப்பேட்டையில், 35 குடும்பங்கள் மற்றும் சீராப்பள்ளி டவுன் பஞ்சாயத்தில், 13 குடும்பங்கள் என மொத்தம், 48 குடும்பங்களுக்கு கலைஞர் குடும்ப நல நிதி வழங்கப்பட்டது.இந்த விழாவில், மாவட்ட செயலாளர் ராஜேஸ்குமார் எம்.பி., கலந்துகொண்டு ஒவ்வொரு குடும்பத்திற்கும், தலா, 10,000 ரூபாய் வழங்கினார்.முன்னதாக இறந்த நிர்வாகிகளின் படங்களை வைத்து, விளக்-கேற்றி மலர் துாவி அஞ்சலி செலுத்தினர். பேரூர் செயலா-ளர்கள் அன்பழகன், செல்வராஜ், சார்பு அணி நிர்வாகிகள் சித்தார்த், கிருபாகரன் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் என, நுாற்-றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.