உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / பள்ளி வாகனங்களில் ஆர்.டி.ஓ., ஆய்வு

பள்ளி வாகனங்களில் ஆர்.டி.ஓ., ஆய்வு

ப.வேலுார்: போக்குவரத்து துறை சார்பில், பரமத்தி வேலுாரில் உள்ள தனியார் பள்ளி வாகனங்களுக்கான வருடாந்திர ஆய்வு, கந்தம்பாளையம் தனியார் பள்ளியில், நேற்று நடந்தது. தமிழ்நாடு மோட்டார் வாகன சிறப்பு விதிகள்படி, ஒவ்வொரு ஆண்டும் பள்ளி வாகனங்களில் ஆய்வு மேற்கொள்ள குழு அமைக்கப்பட்டுள்ளது. அதன்படி, பரமத்தி வேலுார் தாலுகாவிற்குட்பட்ட பள்ளி வாகனங்கள், நேற்று கந்தம்பாளையம் தனியார் பள்ளியில், திருச்செங்கோடு, ஆர்.டி.ஓ., சுகந்தி தலைமையில், தனியார் பள்ளி வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டன.இதில், 194 பள்ளி வாகனங்களில் சிறு குறைபாடுடைய, 31 பள்ளி வாகனங்கள் கண்டறியப்பட்டு குறைகளை நிவர்த்தி செய்து, ஒரு வாரத்துக்குள் ஆய்வுக்கு கொண்டு வர அறிவுறுத்தப்பட்டது. தொடர்ந்து அரவிந்த் கண் மருத்துவமனை சார்பில் தனியார் பள்ளி வாகன டிரைவர்களுக்கு இலவச கண் பரிசோதனை சிகிச்சை மற்றும் ஆலோசனை வழங்கப்பட்டது.ப.வேலுார் டி.எஸ்.பி., சங்கீதா, நாமக்கல் தெற்கு வட்டார போக்குவரத்து அலுவலர் முருகன், பரமத்தி மோட்டார் வாகன ஆய்வாளர் சரவணன் ஆகியோர் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ