மேலும் செய்திகள்
வினாயகர் சதுர்த்தி வெகுவிமரிசை
08-Sep-2024
ராசிபுரம்: ராசிபுரம் கடைவீதியில் பிரசித்தி பெற்ற இரட்டை விநாயகர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் தான் மூலவர்களாக இருக்கும், 2 விநாயகர்கள் ஒரே மாதிரியாக அமர்ந்து பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகின்றனர். விநாயகர் சதுர்த்தியையொட்டி, கடை வீதியில் அமைந்துள்ள இரட்டை விநாயகருக்கு சிறப்பு பூஜை நடந்தது. நேற்று முன்தினம், இரட்டை விநாயகருக்கு பால், மஞ்சள், பன்னீர், சந்தனம் ஆகியவற்றால் அபிஷேகம் நடந்தது.நேற்று விடுமுறை தினம் என்பதால், இரட்டை விநாயகருக்கு சந்தன காப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. சந்தன காப்பு ராஜ அலங்காரத்தில் விநாயகர்கள் பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு தீபாராதனைகளுடன், தீர்த்த பிரசாதமும் வழங்கப்பட்டது.
08-Sep-2024