மேலும் செய்திகள்
சுந்தரேஸ்வரர் கோவிலில் சங்கடஹர சதுர்த்தி
11-Oct-2025
சேந்தமங்கலம்: ஐப்பசி மாத சங்கடஹர சதுர்த்தியையொட்டி, சேந்தமங்கலம் சுற்று வட்டாரத்தில் உள்ள அனைத்து விநாயகர் கோவில்களிலும், நேற்று சிறப்பு பூஜை நடந்தது. முன்னதாக, நாமக்கல் பிரதான சாலையில் அமைந்துள்ள தத்தாஸ்ரமத்தில் உள்ள சங்கடஹர விநாயகர் கோவிலில், நேற்று காலை யாக வேள்வியுடன் பூஜை தொடங்கியது. தொடர்ந்து, விநாயகருக்கு பல்வேறு வகையான வாசனை திரவியங்கள் கொண்டு அபிஷேகம், அலங்காரம் செய்-யப்பட்டு தீபாராதனை நடந்தது.சங்கடஹர சதுர்த்தி அன்று, 108 முறை விநாயகரை வலம் வந்து வேண்டினால் நினைத்தது நடக்கும் என்பது நம்பிக்கை. அதனால், ஒவ்வொரு மாதமும் சங்கடஹர சதுர்த்தி அன்று பக்-தர்கள் கூட்டம் அதிகளவில் இங்கு காணப்படும். நிறைவாக பக்-தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. அதேபோல், மஞ்சபு-டையார் வீதியில் அமைந்துள்ள செல்வ விநாயகர், மேற்கு கடை வீதியில் அமைந்துள்ள முத்து விநாயகர், காந்திபுரத்தில் அமைந்-துள்ள விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம், பூஜை நடந்தது.
11-Oct-2025