உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / திருச்செங்கோட்டில் சதய நட்சத்திர அன்னதான விழா: எம்.பி., துவக்கம்

திருச்செங்கோட்டில் சதய நட்சத்திர அன்னதான விழா: எம்.பி., துவக்கம்

திருச்செங்கோடு: திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் மலைக்கோவில், சதய நட்சத்தி-ரக்காரர்களுக்கு பரிகார ஸ்தலமாகும். இதற்காக மலைக்கு வரும் பக்தர்களுக்கு, மாதந்தோறும் சதய நட்சத்திரத்தன்று, திருச்செங்-கோடு - நாமக்கல் ரோடு, பச்சியம்மன் கோவில் முன் அன்ன-தானம் வழங்கப்படுகிறது.இந்நிகழ்ச்சியை, நாமக்கல் எம்.பி., மாதேஸ்வரன், நகராட்சி சேர்மன் நளினி சுரேஷ்பாபு ஆகியோர் தொடங்கி வைத்தனர். பக்-தர்கள், ஆன்மிக பெரியோர்களின் பங்களிப்பில், மாதந்தோறும் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடக்கிறது. ஆண்டாள் பக்-தர்கள் பேரவை சார்பில், இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன.மேலும், தமிழகம் முழுவதும் பதினைந்து கோவில்களுக்கு மேல் அன்னதானம் செய்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்த அன்ன-தான நிகழ்ச்சியில், தி.மு.க., - கொ.ம.தே.க., கட்சியின் முக்கிய நிர்வாகிகள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை