தி.மு.க., நிர்வாகிகளின் வாரிசுக்கு உதவித்தொகை
நாமக்கல்: நாமக்கல் கிழக்கு மாவட்டத்தில் உள்ள, தி.மு.க., நிர்வாகிகள், கிளை செயலாளர்கள் மற்றும் பூத் கமிட்டி உறுப்பினர்களின் வாரிசுகளுக்கான கல்வி உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி, மாவட்ட தி.மு.க., கட்சி அலுவலகத்தில் நேற்று நடந்தது. மாவட்ட அவைத்தலைவர் மணிமாறன் தலைமை வகித்தார். எம்.எல்.ஏ.,க்கள் ராமலிங்கம், பொன்னுசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளரும், எம்.பி.,யுமான ராஜேஸ்குமார், 50 மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கினார்.நாமக்கல் மாநகராட்சி துணை மேயர் பூபதி, நகர செயலாளர்கள் ராணா ஆனந்த், சங்கர், சிவக்குமார், ஒன்றிய செயலாளர்கள் அசோக்குமார், பழனிவேல், நவலடி, டவுன் பஞ்., செயலாளர்கள் செல்லவேல், தனபால், மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் கிருபாகரன், மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் இளம்பரிதி உள்பட பலர் பங்கேற்றனர்.