உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / கூகுள் மேப் யாருக்கெல்லாம் உதவி செய்யுதுன்னு பாருங்க; ஏ.டி.எம்., கொள்ளையில் அதிர்ச்சி

கூகுள் மேப் யாருக்கெல்லாம் உதவி செய்யுதுன்னு பாருங்க; ஏ.டி.எம்., கொள்ளையில் அதிர்ச்சி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

நாமக்கல்: ''வட மாநில கொள்ளையர்கள், கூகுள் மேப் உதவியுடன் எஸ்.பி.ஐ., ஏ.டி.எம்.,களை கண்டறிந்து கொள்ளையடித்தது விசாரணையில் தெரியவந்துள்ளது,'' என டி.ஐ.ஜி., உமா கூறினார்.கேரளாவில் ஒரே இரவில் 3 ஏ.டி.எம்.,களில் கொள்ளை அடித்துவிட்டு கன்டெய்னர் லாரியில் தப்பிச் செல்ல முயன்ற கொள்ளையர்களை நாமக்கல் மாவட்ட போலீசார் துப்பாக்கி முனையில் சுட்டு பிடித்தனர். அதில், கொள்ளையன் ஒருவன் உயிரிழந்தான்.இது தொடர்பாக சேலம் சரக டிஐஜி உமா கூறியதாவது: கொள்ளையர்கள் அனைவரும் திருச்சூரில் காரில் சென்று தான் கொள்ளையடித்துள்ளனர். பின்னர் லாரியில் மாறி வந்துள்ளனர். அந்த லாரி வழக்கமாக செல்லும் லாரிதான். கொள்ளைக்கு பின் மேற்கு மண்டலம் முழுதும் உஷார்படுத்தப்பட்டது. போலீசார் வாகன சோதனையில் நிற்காமல் சென்றதால் சந்தேகம் ஏற்பட்டது. குமாரபாளையம் சாலையில் லாரி நிற்காமல் சென்றது. நெப்படை நோக்கி திரும்பிய லாரி விபத்தை ஏற்படுத்தியது. போலீசார் துரத்தி பிடித்ததில், அது கேரளாவில் இருந்து வந்தது தெரியவந்தது.கன்டெய்னரில் இருந்த காரை வைத்து தான் ஏ.டி.எம்., கொள்ளை கும்பல் என கண்டறிந்தோம். அதன்பேரில் தான் அவர்களை பிடிக்க முயன்றனர். அப்போது நடந்த தாக்குதலில் கொள்ளையன் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். திட்டமிட்டு என்கவுன்டர் நடக்கவில்லை. போலீஸ் சப் இன்ஸ்பெக்டரை தாக்கிவிட்டு ஓடும்போது பாதுகாப்புக்காக சுட்டோம். இறந்தவர்கள் பெயர் ஜமாலூன்; பிடிபட்ட 7 பேரும் ஹரியானாவைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது. இவர்கள் எஸ்.பி.ஐ., ஏ.டி.எம்.,களை குறிவைத்து கூகுள் மேப் உதவியுடன் கொள்ளையடித்து உள்ளனர்.புலன் விசாரணைக்கு பிறகே முழு விவரங்கள் தெரியும். இவ்வாறு அவர் கூறினார்.

தடயவியல் நிபுணர்கள் ஆய்வு

இதனிடையே, குமாரபாளையத்தில் என்கவுன்டர் நடந்த இடத்தில் தடயவியல் நிபுணர்கள் ஆய்வு செய்ததனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

அப்பாவி
செப் 28, 2024 01:11

வடக்கன்ஸ்தான் இது மாதிரி கூகுள்மேப் பயன்படுத்துவாங்க. தமிழன் சும்மா குடிச்சு கும்மாளம் போட்டு ரீல்ஸ் மட்டும்தான் போடுவான்.


Thatsanamurthi
செப் 27, 2024 22:34

சரி தான்..


Ramesh Sargam
செப் 27, 2024 20:33

கூகுள் மேப் கண்டறிந்தவன் நொந்துகொள்வான், ஏன் அப்பா நாம் வளர்ச்சிக்காக கண்டுபிடித்த ஒரு கண்டுபிடிப்பை, மக்கள் இப்படி கொள்ளைடிப்பதற்காக பயன்படுத்துகிறார்கள் என்று. எல்லா கண்டுபிடிப்புக்களும் இப்படித்தான்.


பேசும் தமிழன்
செப் 27, 2024 20:22

மார்க்க ஆள் என்று தெரியாமல் சுட்டு விட்டார்கள் / பிடித்து விட்டார்கள் போல் தெரிகிறது


Easwar Moorthy
செப் 27, 2024 18:58

கேரளாவில் தப்பிய லாரி எப்படி நாமக்கல் வரையில் யாராலும் தடுக்க முடியவில்லை


shakti
செப் 27, 2024 18:31

இந்த மார்க்கமும் அமைதி மார்க்கம் தான் போல ...


raja
செப் 27, 2024 18:29

ஜமாலூன்... புரிந்ததா தமிழா... விடியலின் தொப்புள் கொடி உறவு...இந்து கோயில்களை கொள்ளை அடித்த கஜினி பரம்பரை....ஜாக்கிரதையாக இருங்க ...


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை