ராசிபுரம்: ராசிபுரம் உழவர் சந்தையில், நேற்று ஒரே நாளில், 6.20 லட்சம் ரூபாய்க்கு காய்கறி, பழங்கள் விற்பனையாகின.நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தில் உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது. இங்கு, தினமும், காலை, 5:00 முதல், 10:00 மணி வரை, சுற்று வட்-டார பகுதியில் உள்ள விவசாயிகள், தங்கள் தோட்டங்களில் விளைந்த காய்கறி, பழங்களை கொண்டுவந்து நேரடியாக விற்பனை செய்கின்-றனர். பொதுமக்கள் உழவர் சந்தைக்கு வந்து காய்கறிகளை வாங்கி செல்கின்றனர். அதன்படி, 132 விவசாயிகள், தங்களது விளை பொருட்களை, நேற்று விற்பனைக்கு கொண்டு வந்தனர். கடந்த வாரம், 70 ரூபாய்க்கு விற்ற ஒரு கிலோ தக்காளி, ஒரே வாரத்தில், 20 ரூபாய் குறைந்து, 50 ரூபாய்க்கு விற்பனையானது. அதேபோல், 50 ரூபாய்க்கு விற்ற கத்தரிக்காய், நேற்று, 60 ரூபாய்க்கு விற்பனையானது.தக்காளி கிலோ, 50, கத்தரி, 60, வெண்டை, 40, புடலை, 40, பீர்க்கன், 60, பாகல், 70, சுரைக்காய், 15, பச்சை மிளகாய், 60, சின்ன வெங்காயம், 60, பெரிய வெங்காயம், 48, முட்டைகோஸ், 45 ரூபாய்க்கு விற்பனையானது.மொத்தம், 11,740 கிலோ காய்கறி, 2,960 கிலோ பழங்கள், 200 கிலோ பூக்கள் என, மொத்தம், 14,900 கிலோ காய்கறி, பழங்கள் விற்பனையாகின. இதன் மொத்த மதிப்பு, 6.20 லட்சம் ரூபாயாகும்.