உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / செல்வ விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்

செல்வ விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்

நாமகிரிப்பேட்டை: நாமகிரிப்பேட்டை, கோபாலபுரத்தில் பிரசித்தி பெற்ற செல்வ விநாயகர் கோவில் உள்ளது. இக்கோவிலில், அஷ்டபந்தன கும்-பாபிஷேக விழா, கடந்த, 18ல் கணபதி ஹோமத்துடன் தொடங்கி-யது. ஞாயிறு காலை கங்கா, யமுனா, விரி ஆற்றில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித தீர்த்தங்களை, பெருமாள் கோவிலில் வைத்து வழிபாடு செய்து ஊர்வலமாக எடுத்து வந்தனர்.இதில், பெண்கள் திரளாக கலந்துகொண்டு தீர்த்தக்குடம், பால்-குடம் எடுத்து ஊர்வலமாக வந்தனர். மேலும், கோபுர கலசங்கள் பக்தர்களின் தரிசனத்திற்காக வீதி உலாவாக கொண்டு வரப்பட்-டது. நேற்று அதிகாலை, கடங்கள் புறப்பாடு, தீபாராதனையை தொடர்ந்து, 6:00 மணிக்கு புனித நீரை கலசங்களுக்கு ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. சுற்று வட்டார பகுதியை சேர்ந்த பக்-தர்கள் திரளாக கலந்துகொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை