உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / சேந்தமங்கலம் அரசு கல்லுாரியில் மாணவர் சேர்க்கை தொடக்கம்

சேந்தமங்கலம் அரசு கல்லுாரியில் மாணவர் சேர்க்கை தொடக்கம்

‍சேந்தமங்கலம் : சேந்தமங்கலம் அரசு கலை அறிவியல் கல்லுாரியில், மாணவர் சேர்க்கைக்காக, 5,085 பேர் விண்ணப்பித்துள்ளனர். சேந்தமங்கலம் அரசு கலை அறிவியல் கல்லுாரியில், 2024-25ம் ஆண்டிற்கான மாணவர் சேர்க்கைக்கு, 5,085 பேர் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துள்ளனர். இதில், சிறப்பு ஒதுக்கீட்டின் கீழ் விண்ணப்பித்துள்ள மாணவர்களுக்கு, இன்று, 29ல் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு தொடங்கி வரும், 30 வரை நடக்கிறது. இதை தொடர்ந்து, முதல் கட்ட கலந்தாய்வு ஜூன், 10ல் தொடங்கி, 15 வரையும், 2ம் கட்ட கலந்தாய்வு, 24ல் தொடங்கி, 29 வரை நடக்கிறது. துறை வாரியாக முதல், 300 மாணவர்கள் வரவழைக்கப்பட்டு கலந்தாய்வு நடத்தப்பட உள்ளது. இந்தாண்டு மாணவர் சேர்க்கைக்காக, பி.ஏ., தமிழ் பாடத்திற்கு, 1,562 பேர், பி.எஸ்சி., சி.எஸ் பாடத்திற்கு, 1,182 பேர், பி.ஏ., இங்லீஸ், 717 பேர் என, மொத்தம், 5,085 பேர் விண்ணப்பித்துள்ளதாக, கல்லுாரி முதல்வர் பாரதி தெரிவித்தார். 2ம் கட்ட கலந்தாய்வு, வரும், 10ல் தொடங்கி, 15 வரையும், 3ம் கட்ட மாணவர் சேர்க்கை கலந்தாய்வு, 24ல் தொடங்கி, 29 வரையும் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ