உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / சிவாயம் விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா கோலாகலம்

சிவாயம் விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா கோலாகலம்

குளித்தலை : குளித்தலை அடுத்த, சிவாயம் கிராமத்தில் விநாயகர், ஏகாம்பரி ஈஸ்வரி, மகா மாரியம்மன், கருப்பண்ண சுவாமி உள்ளிட்ட பரிவார தெய்வங்கள் அடங்கிய கோவில் அமைந்துள்ளது. கோவிலை புனரமைத்து கும்பாபிஷேகம் செய்ய கிராம மக்கள் முடிவு செய்தனர். அதன்படி திருப்பணிகள் நடைபெற்றது.நேற்று காலை, குளித்தலை கடம்பர் கோவில் காவிரி ஆற்றில் இருந்து, பொதுமக்கள் புனித நீர் எடுத்து வந்தனர். சிவாச்சாரியார்கள் யாக வேள்வி சாலையில், புனித நீரை வைத்து விக்னேஸ்வர பூஜை, நான்கு கால யாக வேள்வி பூஜைகளை செய்தனர். பின்னர், புனித நீரை சிவாச்சாரியார்கள் மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக கொண்டு வந்தனர். வேத மந்திரங்கள் முழங்க கோபுர கலசத்திற்கு புனித நீரை ஊற்றி, கும்பாபிஷேகம் செய்தனர்.கலசத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. தொடர்ந்து பக்தர்களுக்கு புனிதநீர் தெளிக்கப்பட்டது.சுவாமி மூலவர்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு, சிறப்பு அபிஷேகங்கள் நடந்தன. சிவாயம் பஞ்., சுற்றுவட்டார கிராமத்தை சேர்ந்த பொது மக்கள், பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வழிபட்டனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை