மேலும் செய்திகள்
கூட்டுறவு பணியாளர் சிறப்பு பயிற்சி
19-Dec-2025
ப.வேலுார்: ப.வேலுாரில், நாமக்கல் மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் பணியாளர்களுக்கு, திறன் மேம்-பாட்டு பயிற்சி நடந்தது.தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்க பணியாளர்களுக்கு, திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்க வேண்டும்' என, மாநில கூட்டுறவு சங்-கங்களின் பதிவாளர் உத்தரவிட்டுள்ளார். இதை-யொட்டி, நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கூட்டு-றவு சங்கங்களின் பணியாளர்களுக்கு, நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின், ப.வேலுார் வட்டார அலுவலகத்தில், பயிற்சி வகுப்பு நடந்தது. மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மேலாண் இயக்குனர் சந்தானம் தலைமை வகித்து, துவக்கி வைத்தார். முதன்மை வருவாய் அலுவலர் சேகர், மாவட்ட கூட்டுறவு ஒன்றிய மேலாண் இயக்குனர் சரவணன், விரிவுரையாளர்கள் சுப்ரமணியம், ரவிச்சந்திரன் ஆகியோர் பயிற்சி வகுப்பை நடத்-தினர். அதில், மாவட்டத்தில் உள்ள தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களின் பணியா-ளர்கள் பங்கேற்றனர்.
19-Dec-2025