உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / சிறுதானிய உணவு திருவிழா: எம்.பி., தொடங்கி வைப்பு

சிறுதானிய உணவு திருவிழா: எம்.பி., தொடங்கி வைப்பு

நாமக்கல்: வேளாண் துறை சார்பில், தேசிய உணவு பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து இயக்கம் மற்றும் ஊட்டமிகு சிறுதானியங்கள் திட்-டத்தின் கீழ், சிறுதானிய உணவு திருவிழா, நாமக்கல்லில் நடந்-தது.வேளாண் இணை இயக்குனர் மல்லிகா வரவேற்றார். எம்.பி., மாதேஸ்வரன், எம்.எல்.ஏ., ராமலிங்கம், மேயர் கலாநிதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவரும், எம்.பி.,யுமான ராஜேஸ்குமார் தலைமை வகித்து, சிறுதானிய உணவு திருவிழாவை தொடங்கி வைத்து பேசியதாவது:இந்தியாவிற்கு வழிகாட்டியாக, விவசாயத்திற்கு இலவச மின்சா-ரத்தை, முன்னாள் முதல்வர் கருணாநிதி வழங்கினார். 2006ல், விவசாய கடன்களை ரத்து செய்தார். அவரை பின்பற்றி, தற்போ-தைய முதல்வர் ஸ்டாலின், சிறுதானிய உற்பத்திக்கு பெரிய முக்கி-யத்துவம் கொடுத்துள்ளார். வேளாண் துறையை எப்போதும் தாங்கி பிடிக்கும் ஒரே அரசாக, தி.மு.க., அரசு உள்ளது. நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தொடங்கப்பட்டு, மூன்று மாதத்தில், 200 கோடி ரூபாய் டிபாசிட் பெறப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் பேசினார்.முன்னதாக, சிறுதானிய உணவு திருவிழாவையொட்டி அமைக்-கப்பட்ட சிறுதானிய உணவு பொருட்கள் கண்காட்சியை, எம்.பி., ராஜேஸ்குமார் திறந்து வைத்து பார்வையிட்டார். விழாவை முன்-னிட்டு, 32 பயனாளிகளுக்கு மின் கல தெளிப்பான்கள், தார்பா-லின்கள், மண் புழு உரப்படுகைகள் உள்பட பல்வேறு நலத்திட்ட உதவிகள், இடுபொருட்கள் வழங்கப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை