மேலும் செய்திகள்
சார் - பதிவாளர் அலுவலகத்தில் புகுந்த பாம்பு
05-Sep-2025
ராசிபுரம் ராசிபுரம், பழைய பஸ் ஸ்டாண்ட் பகுதியில், டிபார்ட்மென்ட் ஸ்டோர் செயல்பட்டு வருகிறது. இந்த கடையில், 8க்கும் மேற்பட்ட ஊழியர்கள் வேலை செய்து வருகின்றனர். அதுமட்டுமின்றி தினசரி, 100க்கும் மேற்பட்டோர் கடைக்கு வந்து செல்கின்றனர். நேற்று காலை கடைக்குள், 5 அடி நீளம் கொண்ட கொம்பேறி மூக்கன் பாம்பு இருப்பதை பார்த்த ஊழியர்கள் அலறியடித்துக்கொண்டு வெளியே ஓடி வந்தனர். உடனடியாக ராசிபுரம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு துறையினர் வருவதற்குள், பாம்பு கடைக்குள் சென்று மறைந்தது. தீயணைப்பு துறையினர் நீண்ட நேரமாக போராடி பாம்பை கண்டுபிடிக்க முடியவில்லை. ஆனால், அருகில் இருந்த நபர் ஒருவர் பாம்பை சுலபமாக கையில் பிடித்து தீயணைப்பு துறையினரிடம் கொடுத்தார். பாம்பை சாக்குப்பையில் போட்டு, வனத்துறையினர் காப்பு காட்டில் விடுவித்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
05-Sep-2025