உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / தந்தையை தாக்கிய மகனுக்கு காப்பு

தந்தையை தாக்கிய மகனுக்கு காப்பு

ப.வேலுார், ஜன. 2--ப.வேலுார், வடக்கு நல்லியாம்பாளையத்தை சேர்ந்தவர் முருகேசன், 60; கூலித்தொழிலாளி, இவரது மனைவி வசந்தா, 53; இவர்களது மகன் மணிவேல், 29; லாரி டிரைவர். முருகேசனுக்கு குடிப்பழக்கம் உள்ளது. நேற்று முன்தினம் இரவு, முருகேசன் வழக்கம்போல் மது அருந்திவிட்டு வீட்டுக்கு வந்துள்ளார்.அப்போது, முருகேசனுக்கும், மணிவேலுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. இதில், முருகேசன் நிலை தடுமாறி கீழே விழுந்ததில் தலையில் காயம் ஏற்பட்டது.அருகில் இருந்தவர்கள் முருகேசனை மீட்டு, ப.வேலுார் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். இதுகுறித்து புகார்படி, ப.வேலுார் போலீசார், மணிவேலை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை