உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / புரட்டாசி சதுர்த்தசியையொட்டி நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம்

புரட்டாசி சதுர்த்தசியையொட்டி நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம்

ப.வேலுார்: புரட்டாசி வளர்பிறை சதுர்த்தசியையொட்டி, ப.வேலுார் திருஞா-னசம்பந்தர் மடாலயத்தில், நடராஜர் பெருமானுக்கு சிறப்பு அபி-ஷேகம், வழிபாடு நேற்று நடந்தது.சிவன் கோவில்களில் நடராஜருக்கு ஆண்டில், ஆறு நாள் அபி-ஷேகம் நடக்கும். அவை, சித்திரை திருவோணம், ஆனி உத்-திரம், மார்கழி திருவாதிரை, புரட்டாசி, ஆவணி மாத வளர்பிறை சதுர்த்தசி திதி, இந்த நாட்களில் கோவில்களில் நடராஜர், சிவ-காமி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடப்பது வழக்கம். அதன்படி, நேற்று புரட்டாசி மாத வளர்பிறை சதுர்த்தசியை-யொட்டி, ப.வேலுார் திருஞானசம்பந்தர் மடாலயத்தில், நடராஜ-ருக்கு கைலாய வாத்தியம் முழங்க தேவாரம், திருவாசகம் ஓத-லுடன் சிவகாமசுந்தரி உடனாகிய நடராஜருக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம், விபூதி, தேன் உள்ளிட்ட, 18 வகையான வாசனை திரவியங்-களால் சிறப்பு அபிஷேகம் நேற்று நடந்தது.திரளான பக்தர்கள், நடராஜ பெருமானை தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ