உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / ஆஞ்சநேயருக்கு சிறப்பு வழிபாடு

ஆஞ்சநேயருக்கு சிறப்பு வழிபாடு

நாமக்கல்: நாமக்கல்லில் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவில் அமைந்துள்ளது. இங்கு மார்கழி மூல நட்சத்திரத்தன்று நடக்கும் ஆஞ்சநேயர் ஜெயந்தி, அமாவாசை, பவுர்ணமி, தமிழ்மாத முதல் ஞாயிறு, தமிழ், ஆங்கிலம், தெலுங்கு வருட பிறப்பு உள்ளிட்ட பல்வேறு தினங்களில் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்படும்.அதன்படி, நேற்று தை கடைசி ஞாயிறையொட்டி ஆஞ்சநேயருக்கு வடை மாலை சாற்றப்பட்டது. அதை தொடர்ந்து பால், தயிர், மஞ்சள், சந்தனம் உள்ளிட்டவைகளால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. மேலும், மலர் கிரீடத்துடன் முத்தங்கி அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ