உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / ப.வேலுார், பொத்தனுார் பகுதியில் தெருநாய்கள் தொல்லை அதிகரிப்பு

ப.வேலுார், பொத்தனுார் பகுதியில் தெருநாய்கள் தொல்லை அதிகரிப்பு

ப.வேலுார், ப.வேலுார், பொத்தனூர் பகுதி ரோடுகளில், தெரு நாய்கள் கூட்டம், கூட்டமாக சுற்றி வருகிறது. குழந்தைகள், பெரியவர்களை கடித்து வருவதோடு, சாலைகளில் திரிவதால், வாகன விபத்துக்களும் ஏற்பட்டு வருகின்றன.ப.வேலுார் அரசு மருத்துவமனை வளாகத்தில் நாய்கள் சொகுசாக படுத்துக் கொள்கின்றன. நோயாளிகள் கூட்டம் கூட்டமாக வந்து செல்லும் இடத்தில் நாய்கள் படுத்திருப்பது நோயாளிகளுக்கு அச்சத்தை ஏற்படுத்துகிறது. நாய்கள் இருக்கும் பகுதிகளில் நோயாளிகள் பயந்தபடியே கடந்து செல்கின்றன. கடந்த சில நாட்களுக்கு முன், ப.வேலுார் அரசு மருத்துவமனையில் நாய் கடித்ததால் நோயாளிக்கு அங்கேயே தடுப்பூசி போடப்பட்டது. குறிப்பாக, ப.வேலுார் பஸ் ஸ்டாண்ட், போலீஸ் ஸ்டேஷன் வளாகம், ப.வேலுார் அரசு மருத்துவமனை, பள்ளி சாலை, பொத்தனூரில் அரசு மேல்நிலைப்பள்ளி சாலை பகுதிகளில் தெருநாய்கள் அதிக அளவில் சுற்றி திரிகின்றன. தெருக்களில் கூட்டமாக சுற்றும் தெரு நாய்களால், அப்பகுதி மக்கள் நடந்து செல்லவே அச்சப்படுகின்றனர். சாலையின் குறுக்கே திடீரென்று நாய்கள் ஓடுவதால், டூவீலரில் செல்வோர் விபத்தில் சிக்கி, கை, கால் முறிந்து படுகாயமும் அடைந்துள்ளனர். ப.வேலுார், பொத்தனூர் பகுதியில், சுற்றி திரியும் தெரு நாய்களை கட்டுப்படுத்த, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை