உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / கு.பாளையம் கல்லுாரியில் மாணவர் சேர்க்கை தீவிரம்

கு.பாளையம் கல்லுாரியில் மாணவர் சேர்க்கை தீவிரம்

குமாரபாளையம், 'குமாரபாளையம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் மாணவர் சேர்க்கை தீவிரமாக நடந்து வருகிறது' என, கல்லுாரி முதல்வர்(பொ) சரவணாதேவி தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:குமாரபாளையம் அரசு கலை அறிவியல் கல்லுாரியில், 2025-26ம் ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு, கடந்த, 2 முதல் தொடர்ந்து நடந்து வருகிறது. ஏற்கனவே விண்ணப்பித்து, கலந்தாய்வில் கலந்துகொள்ள முடியாத மாணவர்கள் மற்றும் சேர்க்கை கிடைக்கப்பெறாத மாணாக்கர்கள், கல்லுாரிக்கு வருகை தந்து சேர்க்கைக் குழுவை தொடர்பு கொள்ள வேண்டுகிறோம். இதுவரை இணைய தளத்தில் விண்ணப்பிக்காத மாணவர்கள், உடனடியாக ஆன்லைனில் விண்ணப்பித்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும், சேர்க்கை தொடர்பான விபரங்கள், www.gasckpm.org என்ற கல்லுாரி இணையதளத்தில் உள்ளது.இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ