மேலும் செய்திகள்
மாணவர் பேரவை பதவி ஏற்பு
13-Jul-2025
நாமக்கல், நாமக்கல்-திருச்சி சாலையில், நேஷனல் பப்ளிக் பள்ளி அமைந்துள்ளது. இப்பள்ளியில், மாணவர்கள் மத்தியில் தலைமை பண்மை வளர்க்கும் வகையில் ஆண்டுதோறும், மாணவர் மன்ற தேர்தல் நடத்தப்பட்டு, நிர்வாகிகள் தேர்வு செய்யப்படுகின்றனர். அதன்படி, 2025--26ம் ஆண்டிற்கான மாணவர் மன்ற தேர்தல் நடந்தது. பள்ளி தலைமை மாணவர், தலைமை மாணவி, இளைய தலைமை மாணவர், இளைய தலைமை மாணவி என, நான்கு பதவிகளுக்கு தேர்தல் நடந்தது. போட்டியில், 11 பேர் பங்கேற்றனர். அவர்களில், நான்கு பேர் வெற்றி பெற்றனர். அதன்படி, தலைமை மாணவர், மாணவி, இளைய தலைமை மாணவர், மாணவி என, நான்கு பேர் தேர்வு செய்யப்பட்டு பதவியேற்றனர். வெற்றி பெற்றவர்களை, பள்ளி தலைவர் சரவணன், முதல்வர், மேல்நிலைப்பள்ளி முதல்வர் ஆகியோர் சான்றிதழ் வழங்கி கவுரவிக்கப்பட்டனர். ஆசிரியர்கள், மாணவ, மாணவியர் உள்பட பலர் பங்கேற்றனர்.
13-Jul-2025