டேக்வாண்டோ போட்டி மாணவியர் பங்கேற்பு
டேக்வாண்டோ போட்டிமாணவியர் பங்கேற்புநாமக்கல், நவ. 29-மாவட்ட அளவிலான பாரதியார் தின மற்றும் குடியரசு தின விளையாட்டு போட்டியில், நேற்று மாணவியருக்கான டேக்வாண்டோ போட்டி நாமக்கல்லில் நடந்தது.நாமக்கல், தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில், மாவட்ட அளவிலான மாணவியருக்கான டேக்வாண்டோ போட்டி நடந்தது. 220க்கும் மேற்பட்ட மாணவியர் பங்கு பெற்றனர். மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் காந்திமதி, எர்ணாபுரம் அரசு மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் கந்தசாமி, உடற்கல்வி இயக்குனர் செல்லம்மாள், உடற்கல்வி ஆசிரியர்கள் சரவணன், அன்புச்செழியன், கலைச்செல்வி ஆகியோர் கலந்து கொண்டனர்.