உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / நைனாமலை வருதராஜ பெருமாள் கோவிலுக்கு சாலை அமைக்க ஆய்வு

நைனாமலை வருதராஜ பெருமாள் கோவிலுக்கு சாலை அமைக்க ஆய்வு

சேந்தமங்கலம், ஜன. 3-நைனாமலை வருதராஜ பெருமாள் கோவிலுக்கு, தார் சாலை அமைக்கும் பணிக்கான முன்னேற்பாடுகளை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.சேந்தமங்கலம் அருகே, நைனாமலையில் மலை உச்சியில், 2,700 அடி உயரத்தில் வருதராஜ பெருமாள் கோவில் உள்ளது. 3,600 படிக்கட்டுக்கள் உள்ளதால், பெரும்பாலான பக்தர்கள் புரட்டாசி விரத நாட்களில் கோவிலுக்கு செல்ல முடியாத நிலை இருந்தது. இதையடுத்து, மலைக்கு செல்ல தார் சாலை அமைக்க வேண்டும் என, பல ஆண்டுகளாக பக்தர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து, அடிவாரத்தில் இருந்து மலை உச்சியில் உள்ள கோவில் வரை சாலை அமைக்க சுற்றுலாத்துறை மூலம், 13.06 கோடி நிதி ஒதுக்கப்பட்டு மண் சாலை அமைக்கும் பணி நடந்து முடிந்தது. இதை தொடர்ந்து, மலைக்கு செல்ல தார் சாலை அமைக்கும் பணிக்காக, சில மாதங்களுக்கு முன்பு நெடுஞ்சாலைத்துறை மூலம், ரூ.30 கோடி ஒதுக்கப்பட்டது. இதை‍யொட்டி, நெடுஞ்சாலைத்துறை மூலம் தார் சாலை அமைக்க முன்னேற்பாடு மற்றும் முடிவுற்ற மண் சாலை பணியை சேலம் நெடுஞ்சாலை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கண்காணிப்பு பொறியாளர் சசிக்குமார் நேற்று ஆய்வு செய்தார்.அப்போது, சாலையில் தடுப்பு சுவர்கள், பாலங்கள் கட்டுவது குறித்தும், மண் மாதிரி எடுக்கும் பணிகளை ஆய்வு செய்தார். நாமக்கல் கோட்ட பொறியாளர் திருகுணா, உதவி கோட்ட பொறியாளர் சுரேஷ்குமார், உதவி பொறியாளர் பிரனேஷ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை