உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / கரும்பு தோட்டத்தில் அடுத்தடுத்து தீ விபத்து: விவசாயி போலீசில் புகார்

கரும்பு தோட்டத்தில் அடுத்தடுத்து தீ விபத்து: விவசாயி போலீசில் புகார்

பள்ளிப்பாளையம், பள்ளிப்பாளையம் அருகே, கொக்கராயன்பேட்டை அடுத்த மொளசி முனியப்பன்பாளையம் பகுதியை சேர்ந்தவர் விவசாயி தங்கவேல்; இவருக்கு சொந்தமான தோட்டத்தில், கரும்பு சாகுபடி செய்துள்ளார். நேற்று முன்தினம் இரவு, 8:00 மணிக்கு, கரும்பு தோட்டத்தில் ஒரு பகுதியில் திடீரென தீப்பிடித்தது. தகவலறிந்த திருச்செங்கோடு தீயணைப்பு வீரர்கள், விரைந்து வந்து தீயை அணைத்தனர். இதையடுத்து, 10:00 மணிக்கு மீண்டும் இவரது கரும்பு தோட்டத்தின் மற்றொரு பகுதியில் தீப்பிடித்து எரிந்தது.அப்பகுதி மக்கள் தீயை அணைத்தனர்.தொடர்ந்து, நள்ளிரவு, 12:00 மணிக்கு, மீண்டும் வேறோரு பகுதியில் தீப்பிடித்தது. அப்பகுதி மக்கள் தீயை அணைத்தனர். தொடர்ந்து அடுத்தடுத்து கரும்பு தோட்டத்தில் தீ விபத்து நடந்ததால், சந்தேகமடைந்த விவசாயி தங்கவேல், மொளசி போலீசில் புகாரளித்தார். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை