உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / கல்லுாரி பஸ்சில் திடீர் புகை: பீதியால் மாணவர்கள் ஓட்டம்

கல்லுாரி பஸ்சில் திடீர் புகை: பீதியால் மாணவர்கள் ஓட்டம்

கல்லுாரி பஸ்சில்திடீர் புகை: பீதியால் மாணவர்கள் ஓட்டம்ராசிபுரம், நவ. 23-ராசிபுரம் ஆர்.புதுப்பட்டி, பட்டணம் பகுதியில் இருந்து, 30க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியரை ஏற்றிக்கொண்டு தனியார் கல்லுாரி பஸ், நேற்று காலை, நாமக்கல் நோக்கி சென்று கொண்டிருந்தது. ராசிபுரம் நித்திய சுமங்கலி மாரியம்மன் கோவில் அருகே சென்றபோது, பஸ்சின் முன் பகுதியில் இருந்து திடீரென கரும்புகை வெளியேறியது. இதனால் பஸ்சில் தீப்பிடித்துக்கொண்டதாக பதறிய மாணவ, மாணவியர் அலறியடித்துக்கொண்டு கீழே இறங்கி ஓடத்தொடங்கினர்.பஸ் டிரைவர் செல்வம், 50, கீழே இறங்கி பார்த்தபோது, பிரேக் ஷூவில் இருந்து புகை வெளியேறியது தெரிந்தது. ஆனால், அதற்கு மேல் வண்டி நகராமல் நடுரோட்டில் நின்றது. அலுவலக நேரம் என்பதால், பஸ் நின்ற சிறிது நேரத்தில் நீண்ட துாரத்துக்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து, கல்லுாரி மாணவர்கள் ஒன்று சேர்ந்து பஸ்சை தள்ளி சாலையோரம் நிறுத்தினர். அதன்பின் போக்குவரத்து சீரானது. மாணவர்கள், மாற்று பஸ்சில் புறப்பட்டு சென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி