சாலையில் தேங்கும் மழை நீரால் அவதி
வெண்ணந்துார், வெண்ணந்துார் ஒன்றி யம், ஆலம்பட்டி கிராமத்திற்கு ராசிபுரம் - ஆட்டையாம்பட்டி நெடுஞ்சாலையில், மேட்டு மிஷின் பகுதியில் இருந்து செல்லும் சாலையில், சமீபத்தில் பெய்த கனமழையால் மழைநீர் தேங்கியுள்ளது.இந்த சாலையில் ஒரு மாதமாக, மழைநீர் தேங்கி கிடக்கிறது. வெளியே செல்ல வடிகால் வசதி இல்லாததால், மாதக்கணக்கில் தேங்கி கொசுக்கள் அதிகரித்து வருகிறது.அதேபோல் இரவு நேரங்களில் விஷ ஜந்துக்களின் நடமாட்டமும் உள்ளது. டெங்கு, மலேரியா போன்ற வைரஸ் காய்ச்சல் ஏற்படுமோ என்ற அச்சம் உள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள், உடனடியாக சாலையில் தேங்கி நிற்கும் மழை நீரை வெளியேற்ற நடவடிக்கை எடுப்பதுடன், நிரந்தர தீர்வாக வடிகால் வசதி ஏற்படுத்தி தர வேண்டும்.