மேலும் செய்திகள்
ஜவகர் பள்ளியில் முப்பெரும் விழா
25-Apr-2025
நாமக்கல்:நாமக்கல் பி.ஜி.பி., நர்சிங் கல்லுாரியில், கோடைகால உணவு திருவிழா நடந்தது. மாணவர்கள் தங்கள் திறமை, படைப்பாற்றலை வெளிப்படுத்த ஒரு துடிப்பான தளத்தை உருவாக்குவதே உணவு திருவிழாவின் முதன்மை நோக்கமாகும். கல்லுாரி தாளாளர் கணபதி, முதன்மையர் முனைவர் பெரியசாமி, கல்லுாரி முதல்வர் செண்பகலட்சுமி விழாவை தொடங்கி வைத்தனர். ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் விருந்தினர்கள் விழாவில் கலந்து கொண்டனர். உணவு திருவிழாவில், பாரம்பரிய உணவு வகைகள் முதல் சமகால இணை உணவுகள் வரை பல்வேறு வகையான உணவு வகைகள் இடம் பெற்றன. மாணவர்கள், தென்னிந்திய பாரம்பரிய உணவு வகைகளை சமைத்து திறமையை வெளிப்படுத்தினர்.
25-Apr-2025