மேலும் செய்திகள்
சாயும் வாழைகள்: இழப்பீடு பெறுவதில் சிக்கல்
15-Apr-2025
எருமப்பட்டி:எருமப்பட்டி யூனியனில், கடந்த, 6ல் மிக கன மழை கொட்டி தீர்த்தது. சூறாவளி காற்றுடன் கொட்டி தீர்த்த கன மழையால், பவித்திரம், நவலடிப்பட்டி, தோட்டமுடையாம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் வாழை மரங்கள் சாய்ந்தன. இதனால், சாய்ந்த வாழை மரங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து, சூறாவளி காற்றால், தோட்டமுடையாம்பட்டியில் வருவாய்த்துறை, தோட்டக்கலைத்துறை, வேளாண்மை துறை அதிகாரிகள், சேதமடைந்த வாழை தோட்டங்களை பார்வையிட்டனர். அப்போது, ஆறு விவசாயிகளின், ஐந்து ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த வாழை மரங்கள் சேதமடைந்தது தெரியவந்தது. சேதமடைந்த வாழை மரங்களுக்கு இழப்பீடு தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.
15-Apr-2025