உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / மின்சாரம் பாய்ந்து தையல் தொழிலாளி பலி

மின்சாரம் பாய்ந்து தையல் தொழிலாளி பலி

மல்லசமுத்திரம், எலச்சிபாளையம் அருகே, தென்னமரத்துப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார், 40; இவரது மனைவி சந்தியா, 34; தையல் தொழிலாளி. செந்தில்குமார், வையப்பமலையில் சைக்கிள் பழுதுபார்க்கும் கடை நடத்தி வருகிறார். நேற்று காலை, 11:00 மணிக்கு செந்தில்குமார், சந்தியாவின் மொபைல் போனிற்கு தொடர்பு கொண்டுள்ளார். பலமுறை அழைத்தும் எடுக்கவில்லை.இதனால் சந்தேகமடைந்த செந்தில்குமார், அவரது அம்மா கமலாவின் மொபைல் போனிற்கு அழைத்து, சந்தியாவிடம் பேசவேண்டும் என தெரிவித்துள்ளார். இதையடுத்து, கமலா அருகிலிருந்த சந்தியாவின் அறையில் சென்று பார்த்தபோது, சந்தியா தையல் இயந்திரத்தில் வேலை செய்துகொண்டிருந்தபோது மின்சாரம் பாய்ந்து இறந்து கிடந்தது தெரியவந்தது. எலச்சிபாளையம் போலீசார் விசாரித்து வருகின்றனர். தம்பதியற்கு, இரண்டு பெண்குழந்தைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !