உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / வீர ஆஞ்சநேயருக்கு தமிழ் முதல் ஞாயிறு பூஜை

வீர ஆஞ்சநேயருக்கு தமிழ் முதல் ஞாயிறு பூஜை

மல்லசமுத்திரம்: மல்லசமுத்திரம், கோட்டைஅழகுராய பெருமாள் கோவிலில் உள்ள வீரஆஞ்சநேயருக்கு, தமிழ் முதல் ஞாயிறு சிறப்பு பூஜை நடந்தது.மல்லசமுத்திரத்தில், ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீதேவி, பூதேவி தாயார் சமேத கோட்டை அழகுராய பெருமாள் கோவில் வளாகத்தில் உள்ள, வீர ஆஞ்சநேயருக்கு நேற்று தமிழ் மார்கழி மாத முதல் ஞாயிறு தினத்தை முன்னிட்டு வெள்ளிக்கவசம் அணிவிக்கப்பட்டு, 108 வடைமாலை, துளசிமாலை சாற்றி சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. பல்வேறு மூலிகை திரவியங்கள் மற்றும் பால், தயிர், பன்னீர், பஞ்சாமிர்தம், கரும்புசாறு கொண்டு அபி ேஷக ஆராதனை நடந்தது. ஏராளமானோர் சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை