திட்டப்பணிகளை துவக்கி வைத்து நலத்திட்ட உதவி வழங்க தமிழக முதல்வர் நாமக்கல் வருகை: எம்.பி.,
நாமக்கல்: ''தமிழக முதல்வர் ஸ்டாலின், பல்வேறு திட்டப்-பணிகளை தொடங்கி வைத்தும், அரசு நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு வழங்கவும், இம்-மாதம் நாமக்கல் வருகை தருகிறார்,'' என, எம்.பி., ராஜேஸ்குமார் கூறினார்.நாமக்கல் சட்டசபை தொகுதிக்குட்பட்ட பொம்-மைகுட்டைமேடு, லட்சுமி திருமண மண்டபம் அருகில், தமிழக முதல்வர் ஸ்டாலின் வருகை-யையொட்டி, இடம் தேர்வு செய்யும் பணிகளை எம்.பி., ராஜேஸ்குமார் ஆய்வு மேற்கொண்டார். கலெக்டர் உமா தலைமை வகித்தார். எம்.எல்.ஏ., ராமலிங்கம், எஸ்.பி., ராஜேஸ்கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.அப்போது, எம்.பி., ராஜேஸ்குமார் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழக முதல்வர் ஸ்டாலின், அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில், பல்வேறு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறார். அதை தொடர்ந்து, தமி-ழகம் முழுவதும், பல்வேறு மாவட்டங்களுக்கு நேரடியாக சென்று, முடிவுற்ற புதிய திட்டப்பணி-களை தொடங்கி வைத்தும், புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், பல்வேறு துறை சார்ந்த அரசு நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு வழங்கியும் வருகிறார்.அதன் தொடர்ச்சியாக, நாமக்கல் மாவட்டத்திற்கு பல்வேறு புதிய திட்டப்பணிகளை காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்து சிறப்பித்த முதல்வர், இம்மாதம், நேரடியாக வருகை தந்து, பல்வேறு திட்டப்பணிகளை தொடங்கி வைத்து, அடிக்கல் நாட்டி, அரசு நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு வழங்க உள்ளார். அதன்படி கூட்டுறவு, மகளிர் திட்டம், வருவாய், மாற்றுத்-திறனாளிகள் நலம், வேளாண், வேளாண் பொறி-யியல், ஆதி திராவிடர் நலன், பிற்படுத்தப்-பட்டோர் நலம், தாட்கோ போன்ற பல்வேறு துறைகளின் சார்பில், நலத்திட்ட உதவிகளும், பொதுப்பணித்துறை, நகராட்சி நிர்வாகம், உள்-ளாட்சித்துறை, ஊரக வளர்ச்சி துறை போன்ற துறைகள் சார்பில் முடிவற்ற திட்டப்பணிகளை தொடங்கி வைத்தும், புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்ட உள்ளார்.இவ்வாறு அவர் கூறினார்.தொடர்ந்து, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் வடிவேல், மகளிர் திட்ட இயக்-குனர் செல்வராசு, ஆர்.டி.ஓ., பார்த்தீபன், தாசில்தார் சீனிவாசன் உள்பட பலர் பங்கேற்-றனர்.